டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டையே துயரத்தில் ஆழ்த்திய இந்தத் தாக்குதல் குறித்து ஆழ்ந்த வேதனை […]
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்தது. இதன் கீழ், இன்று கடற்படை ஐஎன்எஸ் சூரத்திலிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அழிவு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது. இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கராச்சி கடற்பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை […]
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தத் தாக்குதல் குறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஏப்ரல் 23, 2025 அன்று அதிமுக […]
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்ததில் இரண்டு வெளிநாட்டவர்களும் அடங்குவர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அடுத்ததாக மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. உதாரணமாக, அட்டாரி-வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, பாகிஸ்தானியருக்கு இந்திய விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என அதிரடியான நடவடிக்கைகளை […]
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு கூட்டம் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் மக்களின் பாதுகாப்புக்காக பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். […]
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில் பரிதாபமாக 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தத் தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரையும், […]
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின் படி மொத்தம் 26 பேர் உயிரிழந்ததாகவும் அதில், 20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் […]
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தற்போது வரை கிடைத்த தகவலின் படி சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக முதற்கட்ட விசாரணைகள் […]
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் தற்போது வரை கிடைத்த தகவலின் படி சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில், 20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை ஏற்று, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டார். இது அவரது மூன்றாவது முறையாக சவுதி அரேபியாவுக்கு மேற்கொள்ளும் பயணமாகும், முன்னதாக 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவர் அந்நாட்டுக்கு பயணம் செய்திருந்தார். இந்தப் பயணம் இந்தியா-சவுதி அரேபியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கும் முக்கியமானதாக […]
சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோவில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கும் பிரதமர் மோடிக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். வீடியோவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ” கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கு இடையில் […]
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த பாலம், நூற்றாண்டு கால பழமையான பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடனும் கட்டப்பட்டுள்ளது. மேலும், ரயில், கப்பல் போக்குவரத்தையும் கொடியசைத்து […]
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா – இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இலங்கையில் நிகழ்த்திய உரையில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக இந்தியா 10,000 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாகவும், மேலும் மூன்று கோயில்களை சீரமைக்க உதவி செய்யும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள தமிழ் […]
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை அறிவித்திருக்கிறார். அவருடைய இந்த திடீர் அறிவிப்பு உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 3, 2025 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, இந்தியாவுக்கு 26% சுங்கவரியும், சீனாவுக்கு 34% சுங்கவரியும் விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய வர்த்தகப் போரின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது. எந்தெந்த நாடுகளுக்கு அவர் எவ்வளவு வரி விதித்துள்ளார்? இதற்கு பதில் நடவடிக்கையாக […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3) பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப் போவதாக அறிவித்தார். இதனை அமெரிக்க நேரப்படி (ஏப்ரல் 2), 2025 அன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது டிரம்ப் அறிவித்தார். எதற்காக எந்த வரி? இந்தியா அமெரிக்காவில் இருந்து வரும் […]
டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரை ஓட்டியுள்ள தாய்லாந்திலும் பல அடி உயர கட்டடங்கள் சரிந்துவிழுந்தன. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக கட்டடங்கள் சேதமடைந்திருக்கலாம் என்றும், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இருப்பினும், இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதாவது, நிலநடுக்கம் காரணமாக இணையதளம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு குறித்த […]
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார். எக்ஸ், முகநூல் போன்ற அம்சங்களை கொண்ட ‘ட்ரூத் சோஷியல்’ மீடியாவை அமெரிக்க மக்கள் அதிகமானோர் விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். அதைப்போல, வேறு நாட்டை சேர்ந்தவர்களும் ட்ரம்ப் உடன் நெருங்கி நட்பில் இருக்கும் அரசியல் தலைவர்களும் இந்த சமூக ஊடகத்தில் இணைந்து வருகிறார்கள். அப்படி தான் இந்திய பிரதமர் மோடியும் ‘ட்ரூத் சோஷியல்’ இணைந்த முக்கிய உலகத் […]
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர் தொடர்பாக சுமார் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருக்காலாம் என தெரியவந்ததாகவும் வெளியான தகவல் தான் ஹாட் டாப்பிக்கான ஒரு விஷயமாக வெடித்துள்ளது. இந்த சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் ஆதாரம் இருக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பி பாஜகவை விமர்சனம் செய்தும் பேசியிருக்கிறார். இது […]
டெல்லி : பிரதமர் மோடி அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில் கலந்து கொண்டபோது பல விஷயங்களை பற்றி பேசினார். உதாரணமாக முன்னாள் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா குறித்தும் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் நடந்த சந்திப்பின் போது நடந்த சம்பவங்களை பற்றி நினைவு கூர்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் ஒருமுறை அமெரிக்காவின் ஹூஸ்டனுக்கு சென்றபோது டொனால்ட் டிரம்ப் உடன் சேர்ந்து “ஹவ்டி மோடி” என்கிற […]
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மொரிஷியஸ் சென்றடைந்த பிரதமர் மோடி, நாளை (மார்ச் 12 ஆம் தேதி) நடைபெறும் மொரீஷியஸின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்தியப் பாதுகாப்புப் படைகளின் ஒரு குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை மொரீஷியஸ் சென்றடைந்த இந்திய பிரதமர் […]