என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

17 ஆண்டுகளாக என் கணவர் பிஎஸ்எஃப்-ல் பணியாற்றுகிறார், இனியும் தொடருவார் என எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜவான் பூர்ணம் குமார் மனைவி தெரிவித்துள்ளார்.

PoonamKumarShah

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின் எல்லைகளுக்கு இடையே கொஞ்சம் குறைந்துள்ளது என்று சொல்லலாம். இருப்பினும், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் பதட்டம் முழுவதுமாக குறையவில்லை என்று சொல்லலாம்.

போர் நிறுத்தம் செய்யப்பட்டவுடன் ஏப்.23 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜவான் பூர்ணம் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.பூர்ணம் குமார் ஷா ஏப்ரல் 23, 2025 அன்று பாகிஸ்தான் ரேஞ்சர்ஸால் கைது செய்யப்பட்டார். இவரை எப்போது விடுதலை செய்வார்கள் என அவருடைய குடும்பத்தினர் காத்துகொண்டு இருந்தார்கள்.

அவர்களுக்கு திருப்தி கொடுக்கும் வகையில் கடந்த மே 14-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி சோதனைச் சாவடி வழியாக இந்தியாவிடம் அவரை ஒப்படைத்தனர். இந்திய அரசு, அவரது உடல்நிலை மற்றும் மனநிலையை பரிசோதிக்க மருத்துவக் குழுவையும் அமைத்திருந்தது.

தற்போது வீட்டில் பூர்ணம் குமார் ஷா ஓய்வெடுத்து வருகிறார். இதனையடுத்து, அவருடைய மனைவி ரஜனி ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தன்னுடைய கணவரை விசாரணை செய்து 21 நாட்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர் சித்திரவதை செய்ததாக வேதனையுடன் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” பாகிஸ்தானில் 21 நாட்கள் என் கணவரைத் தடுத்து வைத்திருந்தபோது, பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் அவரை விசாரித்து, தூங்க விடாமல் துன்புறுத்தினர். பஞ்சாப் எல்லையில் பிஎஸ்எஃப் அதிகாரிகள், வீரர்களின் பணி நியமனங்கள் குறித்து கடுமையாக விசாரித்தனர்.

17 ஆண்டுகளாக என் கணவர் பிஎஸ்எஃப்-ல் பணியாற்றுகிறார், இனியும் தொடருவார். விரைவில் அவர் பணிக்குத் திரும்புவார் என்று நம்புகிறேன். உடல்ரீதியாக துன்புறுத்தப்படவில்லை, ஆனால் மனரீதியாக பாதிக்கப்பட்டார். அவரை உளவாளி என சந்தேகித்து, மூன்று முறை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி விசாரித்தனர். உணவு கொடுத்தார்கள், ஆனால் பல் துலக்க அனுமதிக்கவில்லை. இந்தியா திரும்பியபோது அவர் மிகவும் சோர்வாக இருந்தார்” எனவும் பூர்ணம் குமார் ஷா ரஜனி  வேதனையுடன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்