போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

சண்டை நிறுத்தம் இந்தியா-பாகிஸ்தான் நேரடியாக பேசி எடுத்த முடிவு என மீண்டும் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.

s jaishankar donald trump

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு இந்தியா தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே, மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாகவும் தகவல்கள் பரவியது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அப்படி கூறிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக பிரதமர் மோடி ஏற்கனவே விளக்கம் அளித்து பேசியிருந்தார். இருந்தாலும் மீண்டும், ட்ரம்ப் தொடர்ச்சியாகவே, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலை தான் தடுத்து நிறுத்தியதாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்.

தொடர்ச்சியாகவே இந்தியா தரப்பு டிரம்ப் பேச்சை மறுத்து வருகிறது. ஏற்கனவே, பிரதமர் மோடி மறைமுகமாக மறுப்பு தெரிவித்திருந்தார். அதைப்போல, இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கு இல்லை என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்திருந்தார். அவர்களை தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் பேசியிருக்கிறார்.

நெதர்லாந்து ஊடகமான NOSக்கு அளித்த பேட்டியில் இது குறித்து அவர் பேசும்போது ” சண்டையை நிறுத்த எடுத்த முடிவு, இந்தியா-பாகிஸ்தான் நேரடியாக பேசி எடுத்த முடிவு. அமெரிக்காவுக்கு மட்டுமின்றி, எங்களுடன் பேசிய எல்லா நாடுகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன். சண்டையை நிறுத்த பாகிஸ்தான் விரும்பியது. அதை எங்களிடம் சொன்னது. இதுதான் நடந்தது. பாகிஸ்தான் சண்டையை நிறுத்த விரும்பினால், அதை எங்களிடம் நேரடியாக சொல்ல வேண்டும் என்று நாங்கள் கூறினோம். அவர்களின் ஜெனரல் எங்கள் ஜெனரலை அழைத்து, அதைச் சொன்னார்.

அதே சமயம் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. எந்த நாடும் தனது பிரதேசத்தை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தாது. பாகிஸ்தான் 1947-48 முதல் காஷ்மீரின் ஒரு பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அவர்கள் அதை விட்டு வெளியேறுவது குறித்து பேச நாங்கள் தயார்.பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) திரும்ப ஒப்படைப்பது ஆகிய இரண்டு விஷயங்களில் மட்டுமே இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும்” எனவும் எஸ். ஜெய்சங்கரும்  தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்