பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மொத்த சொத்துமதிப்பு ரூ.1,040 கோடி என தீயான ஒரு தகவல் பரவி வருகிறது.

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி, ஜூலை 7, 2025 அன்று தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் தோனி, கிரிக்கெட் உலகில் தனது தலைமைத்துவத்திற்கும், அமைதியான புன்னகைக்கும் பெயர் பெற்றவர்.
இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்கள். அவர் பிறந்த நாள் இன்று என்பதால் அவருடைய பெயர் தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. இணையவாசிகள் பலரும் தோனி குறித்து தான் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், பலரும் அவர் என்னென்ன கார்கள் வைத்திருக்கிறார்? என்னென்ன பைக்குகள் வைத்திருக்கிறார் அவருடைய சொத்து மதிப்பு என்ன என தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காகவே அதற்கான தகவலும் கசிந்துள்ளது. அது பற்றி பார்ப்போம்.
கார்கள்
தோனியின் கார் சேகரிப்பு பற்றி பேசினால் அவர் வைத்திருக்கும் அணைத்து கார்களும் மிகவும் பிரமாண்டமான கார்கள் என்று தான் சொல்லவேண்டும். அவருடைய கார்களுடைய மொத்த மதிப்பு மட்டும் சுமார் 7-8 கோடி ரூபாய். இதில் உள்ள முக்கிய கார்கள்: ஃபெராரி 599 GTO (1.4 கோடி), ஹம்மர் H2 (75 லட்சம்), ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் (1.2 கோடி), போன்டியாக் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம் (68 லட்சம்), ஆடி Q7 (88.33 லட்சம்), ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ (விண்டேஜ், மதிப்பு மாறுபடலாம்), மஹிந்திரா ஸ்கார்பியோ (15-20 லட்சம்), லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் (44.41 லட்சம்), மிட்சுபிஷி பஜெரோ SFX (25 லட்சம்), நிஸான் ஜோங்கா (10.5 லட்சம்), மெர்சிடிஸ் பென்ஸ் GLE (1 கோடி), மற்றும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாஸிடர் (5-10 லட்சம்).
பைக்குகள்
தோனி கார்களில் மட்டுமின்றி பைக்குகளை வாங்குவதில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒரு நபர். ஏனென்றால், அவர் அந்த அளவுக்கு அதிகமான பைக்குகளை அதுவும் பிரமாண்ட பைக்குகளை வாங்கி வைத்திருக்கிறார். அவரிடம் கவாஸாகி நிஞ்ஜா H2 (32.95 லட்சம்), கான்ஃபெடரேட் ஹெல்கேட் X132 (47 லட்சம்), ஹார்லி-டேவிட்ஸன் ஃபேட் பாய் (24.49 லட்சம்), டுகாட்டி 1098 (35 லட்சம்), யமஹா RD350 (விண்டேஜ், 2-3 லட்சம்), சுஸுகி ஹயாபூசா (16.4 லட்சம்), மற்றும் கவாஸாகி நிஞ்ஜா ZX-14R (19 லட்சம்). இவை தவிர, பல 2-ஸ்ட்ரோக் மற்றும் விண்டேஜ் பைக்குகளும் உள்ளன.
மொத்த சொத்துமதிப்பு
இதன் மூலம் இவரது மொத்த சொத்து மதிப்பு 2024ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 1,040 கோடி ரூபாய் (127 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இவரது வருமானம் கிரிக்கெட், விளம்பர ஒப்பந்தங்கள், முதலீடுகள் மற்றும் வணிகத் திட்டங்களிலிருந்து பெறப்படுகிறது.உலகின் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். 2015ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் 23ஆவது இடத்தைப் பிடித்தவர், தற்போதும் தனது எளிய வாழ்க்கை முறையால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இப்போது அவருடைய சம்பளம் குறைவாக இருந்தாலும் கூட அவருடைய மொத்த சொத்துமதிப்பு 1000 கோடிகளுக்கு மேல் இருக்கிறது.