[file image]
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். பழனி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தர்கள் செல்போன் மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டுவர தடை விதித்து திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பழனி முருகன் கோயிலில் செல்போன், வீடியோ சாதனங்களுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
படிப்பாதை, விஞ்ச் கார், ரோப் கார் பகுதிகளில் கைபேசி பாதுகாப்பு மையங்களில் ரூ.5 செலுத்தி வைத்து செல்லலாம் என்றும் சாமி தரிசனத்திற்கு பிறகு கைபேசி மையங்களில் தங்களது செல்போன் உள்ளிட்ட வீடியோ சாதனங்களை பெற்று செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பழனி கோயில் கருவறையை பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார்.
இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பழனி கோயில் கருவறையை செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என்று விதி இருக்கும் நிலையிலும், சில பக்தர்கள் படம் பிடித்து விடுகின்றனர். இதுபோன்ற செயல்களை தடுக்கும் வகையில் அக்டோபர் 1ம் தேதி முதல் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தர்கள் செல்போன் மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…