175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

ஏவுகணை தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 'கோல்டன் டோம்' என்கிற திட்டத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

Trump - Golden Dome

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்’ அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது 2029 ஆம் ஆண்டில் அவரது தற்போதைய பதவிக்காலத்தின் இறுதிக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிஸ்டிக், ஹைப்பர் சோனிக் ஏவுகனைகளை அழிக்கும் வல்லமை கொண்ட `கோல்டன் டோம்’ கேம் சேஞ்சராக இருக்கும் என்றும் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பே ரொனால்ட் ரீகன் (40வது அமெரிக்க ஜனாதிபதி) இந்த திட்டத்தை செயல்படுத்த விரும்பினார், ஆனால் அவரிடம் அதற்கான தொழில்நுட்பம் இல்லை. இந்தத் திட்டம் விண்வெளியில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் முதல் அமைப்பாகும்.

இந்த கோல்டன் டோம், உலகின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும், அதாவது விண்வெளியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் பெற்றிருக்கும். மேலும், இது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட கப்பல் ஏவுகணைகள் ஆகியவற்றை வீழ்த்தும். இது இஸ்ரேல் வைத்திருக்கும் இரும்பு டோம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பை ஓரளவு ஒத்து போவதாக கூறப்படுகிறது.

இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை வெள்ளை மாளிகை இன்னும் வெளியிடவில்லை. இந்த அமைப்பு அமெரிக்காவில் உருவாக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தாலும், எந்த நிறுவனங்கள் இதில் ஈடுபடும் என்பதை அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்