எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த டிடிவி தினகரனுக்கு வழங்கிய அனுமதி ரத்து..!

Published by
murugan

அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த காவல்துறையினர்  வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் அஞ்சலி செலுத்துவதற்கு வழங்கியிருந்த அனுமதியை, சென்னையில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரிப்பதால் காவல்துறையினர் தற்போது ரத்து செய்திருக்கிறார்கள்.

எனவே, சமூக பொறுப்புமிக்க அரசியல் இயக்கமாக பொதுமக்களுக்கிடையே நோய்ப் பரவல் ஏற்படக் காரணமாகிவிடக்கூடாது என்கிற அக்கறையோடு சென்னை இராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் உரிய கொரோனா நெறிகாட்டு வழிமுறைகளின் படி புரட்சித்தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படவிருக்கிறது.

நாளைய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து புறப்படவிருந்த  நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் சென்னைக்கு வராமல் அவரவர் ஊர்களில் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்தினை வைத்து இதய அஞ்சலியைச் செலுத்துடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய நிகழ்வுகளில் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை சரியாகக் கடைபிடிக்க வேண்டுமென்றும் அன்போடு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago