Senthil balaji case hc [Image-TH]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ முறையிட்டுள்ளார். ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் நேற்று கூறியிருந்தது.
அதுமட்டுமில்லாமல், ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், ஜாமீன் கோரி அவரது சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளது.
இதனிடையே, செந்தில்பாலாஜிக்கு செப்-15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நேற்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிடம் வழங்கப்பட்டுள்ளதோடு, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…