EPS CaseMadrasHC d [FileImage]
இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.
கடந்த அதிமுக ஆட்சியின் போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது, திமுக அமைப்பு அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018 ஆம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகார் மனுவில் சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளில் முறைகேடு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இது தொடர்பாக 4800 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததிலும் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்திருந்தார். ஏற்கனவே 2018இல் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த முதற்கட்ட விசாரணையில் பழனிசாமி மீது தவறில்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை நடத்த வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைத்திருந்த நிலையில், புதிதாக விசாரணையை நடத்தவேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரித்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
அதாவது, 2018 இல் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த முதற்கட்ட விசாரணையில் குறை காணமுடியாது எனவும், ஆட்சிமாற்றம் நடைபெற்றதால் புதிய விசாரணைக்கு உத்தரவிடமுடியாது எனவும் கூறி, ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…