சென்னை:இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூ.110.09-க்கு விற்பனை.
பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
அந்த வகையில்,மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
மீண்டும் உயர்வு:
இந்நிலையில்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூ.110.09-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.100.18-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் 9 வது முறை:
கடந்த 15 நாட்களில் 13-வது முறையாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி,கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.69 ஆகவும் ,டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.75 ஆகவும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டாலும் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஒட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…