அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை -அருந்ததிராயின் புத்தகம் நீக்கம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து.!

Published by
Ragi

அருந்ததிராயின் புத்தகம் நீக்கம் தொடர்பாக அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் ” Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. ஏனெனில் இந்த புத்தகத்தில் நக்சலைட் குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அதன்படி, எம்.ஏ இலக்கிய பாடத்தில் இடம் பெற்றிருந்த அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற புத்தகம் நீக்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து  தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதை கண்டிக்கிறேன் . அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை .சாளரத்தை மூடிவிட்டால் காற்றின் வீச்சு நிற்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார் .

Published by
Ragi

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

18 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

49 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago