திருச்சி ஜங்ஷன் ராயல் ரோடு பகுதியில் ஒரு பிரபலமான விடுதி ஒன்று உள்ளது.அந்த விடுதியில் இரவு 10.30 மணிக்கு இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை அழைத்து கொண்டு வந்துள்ளார்.
அப்போது அங்கு மேனேஜராக பணிபுரியும் தமிழரசன் என்பவரிடம் நாங்கள் கணவன் மனைவி எங்களுக்கு தங்குவதற்கு ஒரு அறை வேண்டும் என்று கேட்டுள்ளார்.பின்னர் தமிழரசன் அவர்களுக்கு ஒரு அறை ஒதுக்கி கொடுத்துள்ளார்.
ஆனால் தமிழரசனுக்கு இருவரின் நடவடிக்கைகளை பார்த்ததும் சந்தேகம் வந்துள்ளது.அவர்களின் ஆடைகளை பார்த்ததும் கணவன் மனைவி மாதிரி தெரியாத காரணத்தால் சந்தேகம் உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழரசன் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் விசாரித்துள்ளனர்.பின்னர் அந்த இளைஞர் உண்மையை கூறியுள்ளார்.
அந்த இளைஞர் காவல்துறையினரிடம் விடுதியில் சந்தோசமாக இருக்க ஒரு பெண்ணை அழைத்து வந்ததாகவும் கணவன் மனைவி என்று கூறினால்தான் அறை கொடுப்பார்கள் என்ற காரணத்தால் அவ்வாறு சொன்னதாகவும் கூறியுள்ளார்.
மேலும் காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் சென்னை மண்ணயடியை சேர்ந்த நஜீம் என்றும் அவர் அரசியலில் பொறுப்புவகித்து வருபவர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் அவர் மீது காவல்நிலையத்தில் நிறைய வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.பின்னர் அவரிடம் இருந்து அந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் அவரை பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…