Kalaignar Urimai Thittam: மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

Published by
கெளதம்

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்.15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழாவானது வரும் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்கள். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.06 கோடி பேருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதல் கட்டமாகவும், 05.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேல்முறையீடு:

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.

புகார்கள் வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

11 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

11 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

12 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

13 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

13 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

14 hours ago