[Image Source : Twitter/@gurusamymathi]
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் QR CODE வசதி செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், பொது மக்களின் வசதிக்காக ரேஷன் கடையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் மின்னணு பரிமாற்றம் (கியூ ஆர் கோடு) மூலமாக பணமற்ற பரிவர்த்தனை செய்யும் வசதி கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், தமிழக ரேஷன் கடைகளிலேயே கியூ ஆர் கோடு மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் திட்டம் தற்போது முதன் முறையாக காஞ்சிபுரத்தில் துவங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கியூ ஆர் கோடு நடைமுறை கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கோவையில், ரேஷன் கடைகளில் மின்னனு பரிவர்த்தனையை நடைமுறையை துவக்கி வைத்த பின் பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இந்த மாதத்திற்குள் அனைத்து நியாயவிலை கடைகளிலும் ‘QR CODE’ வசதி நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…