தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று மதியம் சென்னை வருகின்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் மழையால் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆறுகள், குளங்கள், ஏரிகள் அணைகள் நிரம்பியதால் அதன்மூலம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மழையால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், பல வீடுகளும் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு உடனடி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.550 கோடியும், முழுமையான நிவாரணமாக ரூ.2,079 கோடியும் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று மதியம் சென்னை வருகின்றன. சென்னை வரும் மத்திய குழுவினர் முதலில் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, பின்பு சில குழுக்களாக பிரிந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பின் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…