தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்க்கு அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. இவர் உலக வங்கி, ஐநா சபை, மத்திய அரசின் கூட்டு திட்டம் முதலியவற்றில் தனது மூலிகை பெட்ரோலை பதிவு செய்துள்ளார். இவர், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி முதல் மூலிகைப் பெட்ரோல் விற்பனையை தொடங்கியுள்ளார். இதற்க்காக தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட விற்பனை முகவர்களை அறிமுகப்படுத்தும் விழா ராஜபாளையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ராமர் பிள்ளை பேசுகையில் வரும், பிப்ரவரி 27-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் மூலிகை பெட்ரோல் நேரடியாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் ரூ 30-க்கு என அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே உள்ள பகுதியில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் வகையில் தொழிற்சாலை தயாராகவுள்ளது என்றும், கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்படும் இந்த மாற்று எரிப்பொருளை தயாரிக்க எந்தவிதமான தடையும் விதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும், அந்த உத்தரவை தற்போது செயல்படுத்தி வருகிறோம். மார்ச் இறுதிக்குள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக உலக அளவில், காப்புரிமை பெறுவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. நான் நேரடியாக விற்பனை செய்யும் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 20, டீசல் ரூ 24-க்கு விற்பனை செய்யவுள்ளேன் என தெரிவித்தார்.
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…