நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.
இயற்கை வளங்களை ஒருங்கே பெற்ற மாவட்டமான நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அந்த மாவட்டமே சீர்குலைந்த நிலையில் காணப்படுகிறது. இயற்கையின் அழிவில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதற்கு நீலகிரி ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழையால், பல இடங்கள் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில், கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசி வருவதால், சாலைகளில் அங்கங்கு மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பிகளின் மேல் விழுந்ததால், மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ,பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறை வீரர்களும் துரிதமாக செயல்பட்டு மரங்களை அகற்றி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருவதால், 200-க்கும் மேற்பட்ட இடங்கள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 567 முகாம்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…