குழந்தையின் கை அகற்றம்! விசாரணை அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளன – தாய் அஜிஷா பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

குழந்தையின் கை அகற்றப்பட விவகாரத்தில் அரசு வழங்கிய அறிக்கையை நான் ஏற்க மாட்டேன் என குழந்தையின் தாய் பேட்டி.

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் மற்றும் அஜீஷா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையின் கை ராஜீவ் காந்தி அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. செவிலியர்களின் அலட்சியத்தால் தான் குழந்தையின் கை அழுகியதாகவும், அதனால் தான் கையை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் குழந்தையின் தயார் புகார் கூறியிருந்தார்.

அமைச்சர் உத்தரவின் பெயரில் மருத்துவர்கள் குழு விசாரணை மேற்கொண்டதை அடுத்து, இன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குழந்தைக்கு ஒருவகை கிருமி பாதிப்பு ஏற்பட்டு அது மூளை தொற்றாக மாறியிருந்தது. அதன் காரணமாக தான் குழந்தையின் கை அழுகியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தையின் உடலில் மருந்தை தவறான இடத்தில் போடவில்லை என்றும், குழந்தை உடலில் செலுத்திய மருந்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றுள்ளனர்.

மேலும், கடந்த 29ம் தேதி குழந்தையின் கை நிறம் மாறியுள்ளது. இதனை தாய் மற்றும் செவிலியர்களிடம் தெரிவித்தவுடன் உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். பின்னர் 30ம் தேதி மருத்துவர்கள் குழந்தையின் உடல் நிலையை ஆய்வு செய்துள்ளனர். அதற்கு பிறகு குழந்தையின் உயிரை காப்பாற்றவே அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் குழந்தையின் உயிரை காப்பாற்றினர் என விசாரணை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சிகிச்சை காரணமல்ல எனவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், குழந்தையின் கை அகற்றம் குறித்து மருத்துவக்குழு விசாரணை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், சென்னையில் குழந்தையின் தாய் அஜிஷா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மருத்துவக்குழு வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளன.

இதனால், குழந்தையின் கை அகற்றப்பட விவகாரத்தில் அரசு வழங்கிய அறிக்கையை நான் ஏற்க மாட்டேன். மருத்துவக்குழு மருத்துவர்களை மட்டுமே விசாரித்தது, சிகிச்சையின்போது இருந்தவர்களை விசாரிக்கவில்லை. 29-ஆம் தேதி மருத்துவர் குழந்தையின் நிறம் மாறியதை அறிக்கையில் கூறியுள்ளனர். கடந்த 29ம் தேதியே குழந்தையின் கை நிறம் மாறியது, அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பின் தன்மை குறித்து மருத்துவர்கள் கூறியது தவறு. மருத்துவர்கள், செவிலியர்களால் தான் குழந்தையின் கை அகற்றப்பட்டது. எனக்கு நீதி கிடைப்பதை அரசும், முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும். இனி எந்த குழந்தைக்கும் இதுபோல் ஏற்பட கூடாது என்பதற்காக தான் போராடி வருகிறோம். குழந்தைக்கு அளித்த சிகிச்சை குறித்த ஆவணங்களை முழுமையாக அளிக்க வேண்டும். குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு மருத்துவர்களே காரணம். விசாரணைக்குழு அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“பரிபூரண உடல்நலம் பெற்றிட…”முதல்வர் ஸ்டாலின் நலம் பெற விஜய் வாழ்த்து!

சென்னை :  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…

10 minutes ago

என்னைக்கும் விடாமுயற்சி..கால் உடைந்தும் களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…

35 minutes ago

இந்தியா-பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து…பிரதமர் மோடி பெருமிதம்!!

லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

1 hour ago

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆக. 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி : மாவட்டத்தில் ஆகஸ்ட் 5, 2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை, பனிமய மாதா திருத்தலப்…

1 hour ago

திருப்புவனம் அஜித்குமார் விவகாரம் : திருட்டு புகார் அளித்த நிகிதா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமார், நகைத் திருட்டு புகாரில் காவல்துறையினரால்…

2 hours ago

IND vs ENG : காயத்தால் வெளியேறிய ரிஷப் பந்த்…எவ்வளவு நாள் விளையாட முடியாது?

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், ஓல்டு ட்ராஃபோர்டில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின்…

3 hours ago