தமிழக பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு டெல்லியில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச் சாவடிகளை அகற்றுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்:
தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த கோரிக்கை வைத்ததாகவும் எட்டு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வரும் சென்னை- செங்கல்பட்டு சாலையை திண்டிவனம் வரை நீட்டிக்கவும், மாதாவரம் சந்திப்பு- சென்னை வெளிவட்டச்சாலையை ஆறு வழிச்சாலை ஆக வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி துவாக்குடி இடையே உயர்மட்ட சாலை அமைக்க மத்திய அரசின் கோரிக்கை வைத்துள்ளோம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து 10 திட்டங்கள் குறித்து வலியுறுத்தியுள்ளோம். தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் என கூறினார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…