தலைவர்கள் மரியாதை…! எழுத்தாளர் கி.ரா-வின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்….!

Published by
லீனா

துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன், கி.ரா-வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் பிறந்த கி.ராஜநாராயணன் அவர்கள் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். விவசாயம் பார்த்து வந்த இவர் அதன் பின் பல நூல்களை எழுதி, கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்பட கூடிய அளவிற்கு எழுத்தாளராக புகழ்பெற்றார்.

கோபல்லபுரத்து கிராமம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமியக் கதைகள் என பல்வேறு இலக்கியங்களை இயக்கியுள்ளார். தமிழக அரசு மற்றும் கனடா நாட்டின் விருதுகளை பெற்ற இவர், புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் வயது முதிர்வு காரணமாக இவர் காலமானார். இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் இவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

புதுச்சேரியிலிருந்து இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டியில் உள்ள அவரது சொந்த ஊரான இடைசெவல் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, கி.ரா. உடலுக்கு சபாநாயகர் அப்பாவு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.  அதனை தொடர்ந்து, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன்,லோக்சபா எம்.பி.க்கள் கனிமொழி, சு.வெங்கடேசன் ஆகியோர் இறுதி மரியாதையை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன், கி.ரா-வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எழுத்தாளர் ஒருவருக்கு அரசு மரியாதை செலுத்தி அடக்கம் செய்வது இதுவே முதல்முறையாகும்.

Published by
லீனா

Recent Posts

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

2 minutes ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

1 hour ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

2 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

3 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

4 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

6 hours ago