நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் 82 நியாயவிலை கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் அறிவிப்பு. 

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரிய பெரியகருப்பன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தக்காளி விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தக்காளி விலை உயர்வு என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் தான்.

மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. கடந்த காலங்களில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளி சாகுபடி பரப்பளவை குறைத்துவிட்டனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று தக்காளி விலை உயர்கிறது. அடுத்தாண்டு தக்காளி விலையேற்றம் வராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர், சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். சென்னையில் நாளை முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும். முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். அதன்படி, வடசென்னையில் 32 ரேஷன் கடைகளில், மத்திய சென்னையில் 25, தென் சென்னையில் 25 என மொத்தம் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி நாளை முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரேஷன் கடைகளில் கொள்முதல் விலையான ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்படும். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, நாளை முதல் 111 கடைகளில் குறைந்தது தக்காளி ஒரு கிலோ 50 – 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

2 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

2 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

5 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

5 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

6 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

7 hours ago