சாத்தான் குளம் தந்தை-மகன் விவகாரம்! நவம்பர் 11-ஆம் தேதி விசாரணைதொடக்கம் ! சிபிஐ தகவல்!

Published by
லீனா

சாத்தான் குளம் தந்தை-மகன் விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நவம்பர் 11-ஆம் தேதி விசாரணை  தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலர்கள்  கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் நவம்பர் 11-ஆம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கவுள்ளதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சிபிஐ தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உதவி காவல் ஆய்வாளர் ராகு கணேஷ் மற்றும் தலைமை காவல் ஆய்வாளர் முருகன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பதாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், நீதிபதிகள் விதிக்கும் அனைத்து நிபந்தனைக்கும் கட்டுப்படுவோம். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு 130 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக உதவி காவல் ஆய்வாளர் ராகு கணேஷ் மற்றும் தலைமை காவல் ஆய்வாளர் முருகன் ஆகியோர் பார்க்கப்படுகிறார்கள். தந்தை, மகன் இருவரையும் மிருகத்தனமாக தாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். காவலர் ரேவதி கொடுத்த வாக்குமூலத்திலும், இருவரும் கொலை செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் இருவரின் பங்கு முக்கியமானதாக கூறப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணையின் அடிப்படையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் இருவரும் முக்கிய குற்றவாளிகளாகவே பார்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில், நவம்பர் 11-ஆம் தேதி தேதி விசாரணை நடைபெறவுள்ளது. ஆகவே, குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்தனர்.

இதற்கு மனுதாரர் தரப்பில், புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே தந்தை – மகன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது என தெரிவித்தனர். இதற்கு சிபிஐ தரப்பில் வாதிட்ட நீதிபதிகள், காவல்நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்து  புகார்களுக்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா? அப்படி இருந்தால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கோரி பல மனுக்கள் ஏன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பிய நிலையில், தொடர்ந்து இருவரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

”ரயில்வே கிராஸிங்கில் சிசிடிவி கட்டாயம்” – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ரயில்வே துறை.!

”ரயில்வே கிராஸிங்கில் சிசிடிவி கட்டாயம்” – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ரயில்வே துறை.!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…

3 minutes ago

இந்தியா – இங்கிலாந்து இடையே 3வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்.!

லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

22 minutes ago

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

10 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

11 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

14 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

14 hours ago