vijay and seeman [file image]
சென்னை : 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு ‘i am waiting’ என சீமான் பதில் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். தற்போது கோட் படத்தில் நடித்து முடித்த பிறகு மீண்டும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அடுத்ததாக சினிமாவை விட்டு அரசியல் பயணத்தில் முழுவதுமாக ஈடுபடஉள்ளார். மேலும், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில், விஜய் அரசியல் வருகை குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்வியும் பல அரசியல் தலைவர்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் “2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்ற கேள்வியை கேட்டனர்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ” இந்த கேள்விக்கு என்னுடைய தம்பி சொல்வதை போல நான் சொல்லவேண்டும் என்றால் ‘i am waiting’ (காத்திருக்கிறேன்). தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு வந்தால் கண்டிப்பாக நான் அங்கு செல்வேன்”என சீமான் கூறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் ” நீங்களும், விஜய்யும் இரகசியமா சந்தித்ததாக செய்திகள் வெளியாகிறது இது உண்மையா? என்று கேட்டனர். அந்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதில் கூறிய சீமான் ” இரகசியமா சந்திக்க நாங்கள் இருவரும் என்ன கள்ளக்காதலர்களா? நான் அண்ணன் அவர் என்னுடைய தம்பி. அண்ணன் தம்பி சாதாரணமாக சந்திப்பதை போல நாங்கள் இருவரும் சந்தித்துக்கொள்வோம் அவ்வளவு தான்” எனவும் பதில் அளித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…