#BREAKING: ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்.. சிபிசிஐடிக்கு மாற்றம் .!

Published by
murugan

ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக முதல்வர் டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜேஷ் தாஸ் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பெண் எஸ்.பி ஒருவரிடம் ராஜேஷ் தாஸ் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

அந்த பெண் எஸ்.பி காவல்துறை டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, ஆறு பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,  சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 சமீபத்தில் காவல்துறையில் மிக உயர்ந்த பொறுப்பான சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பியாக ராஜேஷ் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

விமான விபத்து நடந்த இடத்தில் ஆய்வு.., காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர்.!

விமான விபத்து நடந்த இடத்தில் ஆய்வு.., காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர்.!

அகமதாபாத் : நேற்றைய தினம் லண்டனுக்குச் சென்ற விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த…

1 hour ago

விமான விபத்து.. அந்த ஒரு காரணத்தால் விமான விபத்தில் இருந்து தப்பிய பெண்.!

அகமதாபாத் : லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் 1.38 மணியளவில் புறப்பட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு…

1 hour ago

ஈரான் ‘அணுசக்தி’ மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்.., பின்வாங்கும் அமெரிக்கா.!

இஸ்ரேல் : இஸ்ரேல் இன்று (ஜூன் 13) அதிகாலை ஈரானை தாக்குவதை உறுதி செய்துள்ளது. ஈரான் மீது திடீரென இஸ்ரேலிய…

2 hours ago

விமான விபத்தில் உயிர் தப்பியவரை சந்தித்த அமைச்சர் அமித்ஷா.!

குஜராத் : அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்று கொண்டிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான ஏர் இந்தியா விமானம்…

3 hours ago

நாட்டையே உலுக்கிய விமான விபத்து: ”சாவை சமாளித்து உயிர் தப்பிய நபர்”.., நடந்தது என்ன.?

குஜராத் : அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ் குமார் விமான விபத்தில், அதில் பயணித்த 242 பேரில்…

3 hours ago

விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழப்பு – ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

குஜராத் : நேற்றைய தினம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா A1171 விமானம் மேக்னை பகுதியில் விபத்துக்குள்ளானது.…

4 hours ago