#BREAKING: பாலியல் தொல்லை.., மேலும் 3 பள்ளிகளுக்கு சம்மன்..!

Published by
murugan

ஆசிரியர்கள் மீது மாணவர்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக மேலும் 3 பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு உள்ளாவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகாரை தொடர்ந்து, சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், பல ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிபதி மகாராஜன் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை கெபிரஜை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மேலும் மூன்று பள்ளிகளுக்கு குழந்தைகள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆசிரியர்கள் மீது மாணவர்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக  அடையாறு கேந்திரய வித்யாலயா, கேளம்பாக்கம் சுஷில் இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் நாமக்கல்லில் உள்ள பள்ளி ஒன்றுக்கும் ஆசிரியர்கள் மீதான புகார்கள் பற்றி விளக்கம் தர சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

19 minutes ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

40 minutes ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

58 minutes ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

2 hours ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

3 hours ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

4 hours ago