9 வகுப்பு படிக்கிற உன் மகள என் மகனுக்கு கொடு…அதலாம் கொடுக்கமுடியாது…அப்ப கடத்துட மவனே.!குடும்பத்தின் உதவியோடு சிறுமியை கடத்திய இளைஞன்.!

Published by
kavitha

சேலம் மாவட்டம் ஆருர்பட்டியில் 14 வயது பள்ளிமாணவியை குடும்பத்தோடு வந்து கடத்திச் சென்ற இளைஞனை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஓமலூர் அருகே உள்ளது தாரமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த சேடப்பட்டி ஊராட்சி இந்த  கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் வயது 40 .அதே பகுதியில் தையல் கடை வைத்து ஜெயகணேஷ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா வயது 36.இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் ஒரு மகனும் 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இவருடைய மகள் அக்கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சௌந்தரராஜன் வயது 24 என்ற இளைஞர் ஜெய்கணேஷின் மகள் பள்ளிக்குச் செல்லும் போது எல்லாம்அவ்வப்போது கேலி கிண்டல் செய்து வந்து உள்ளார்.

சம்பத்தன்று கடந்த 5 ஆம் தேதி அதிகாலை 3 மணி ஜெய்கணேஷின் மகள் வீட்டில் உறங்கி கொண்டிருக்கும் போது சௌந்தரராஜன், அவரது தந்தை சின்னகண்ணன், தாய் பழனியம்மாள், உறவினர் சித்தன் உட்பட 4 பேரும் மாணவியின் வீட்டுக்கு வந்து சிறுமியை தன் மகனிற்கு திருமணம் செய்துவைக்க வேண்டியதாகவும் மறுத்ததால் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்டது தொடர்பாக  மாணவியின் தாய் மேகலா ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சௌந்தராஜன் தன்னுடைய 14 வயது மகளை திருமணம் செய்துகொள்ள கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் 4 பேரையும் தேடிவந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜலகண்டாபுரம் பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சௌந்தரராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து பள்ளி மாணவியை மீட்டனர்.

கடத்தப்பட்ட வழக்கில் வாலிபரை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு உடந்தையாக  இருந்த அவருடைய தாய்-தந்தை உறவினர்கள்  என 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி பெற்றோர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

22 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

22 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago