தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று காணொளிக்காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன், தெற்கு வங்க கடலில் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 15 ஆம் தேதி காற்றழுத்த மண்டலமாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளார். இதன் பிறகு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மே 16 ஆம் தேதி புயலாக மாறி மத்திய வங்கக்கடல் பகுதியில் மையம் கொள்ளும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்படம் கூடும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 15ம் தேதி 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், 16ம் தேதி 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் மற்றும் 17ம் தேதி 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும் காற்று வீச கூடும் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது கூறினார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…