வலுவான அதிமுக-பாஜக உறவின் உறுதி தொடரும் -அண்ணாமலை..!

Published by
murugan

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உறுதியாக இருக்கிறது. இந்த உறவும் உறுதியும் இனிமேலும் இப்படியே தொடர்வதையே பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிகரமாக முன்னிறுத்திக் கொண்டிருக்கும் அஇஅதிமுக, தற்போது மிகவும் பலமாகவும் உறுதியாகவும் இருக்கிறது. இந்த பலமும் உறுதியும் மேலும் வலுப்பெறும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உறுதியாக இருக்கிறது. இந்த உறவும் உறுதியும் இனிமேலும் இப்படியே தொடர்வதையே பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.

அதிமுகவில் யாரை இணைத்துக் கொள்ள வேண்டும்? யாரையெல்லாம் நினைத்துக் கொள்ளக்கூடாது? என்ற முடிவுகளை எடுக்க அந்தக் கட்சியிலேயே தகுதி வாய்ந்த சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த முடிவுகளை எடுக்க முழு அதிகாரமும், தகுதியும் இருக்கிறது. அதில் தலையிடவோ அல்லது கருத்துச் சொல்லவோ எந்த மாற்றுக் கட்சிக்கும், (அது கூட்டணி கட்சியாக இருந்தாலும் கூட) அந்த உரிமை இல்லை என்பதை நான் உணர்ந்தவனாக இருக்கிறேன்.

பொதுவாகவே இந்தியா முழுவதும் பல கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படும் பாஜக எந்த கட்சியின் உள்கட்சி விவகாரத்தில், உள்கட்சி ஜனநாயகத்தில் தலையிடுவதில்லை. அதை நானும் உறுதியாகக் கடைபிடிக்கிறேன். அதிமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் சொன்ன கருத்திற்கு கண் காது மூக்கு ஜோடித்து ஊடகச்சித்திரம் வரையப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர்  ஒபிஎஸ் அவர்களும், முன்னாள்  எடப்பாடி அவர்களும் கடுமையான காலத்திலும் கட்டுப்பாட்டுடன் கட்சியை கட்டிக்காத்து வந்துள்ளனர். மேலும், பாரதிய ஜனதா கட்சியுடன் மிகுந்த நல்லுறவைப் பேணி வந்திருக்கிறார்கள். நாங்களும் அதிமுகவும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த நல்லெண்ணத்துடன் மரியாதையுடனும் இருக்கிறோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. இனிவரும் காலத்திலும் சிறப்பாக செயல்படும் இதற்கு எடப்பாடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் நல்லாட்சியே சாட்சி. ஆகவே அதிமுகவும்-பாஜகவும் எங்கள் உறவினை இன்னும் உறுதியுடன் முன்வைப்போம் என தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

6 hours ago