மத்திய தொல்லியல்துறை பட்டய படிப்புக்கான அறிவிப்பில் தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் இயங்கி வருகிறது.இந்த நிறுவனம் மத்திய அரசின் கீழ் இயங்கி வருகின்றது,சமீபத்தில் இந்த நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தது.அந்த விளம்பரத்தில், முதுகலைப் பட்டம் பெற்று இருப்பவர்கள் தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பிறகு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதாவது தொல்லியல்துறை,இந்திய வரலாறு மற்றும் இந்திய வரலாறு மற்றும் செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பிராகிருதம் , அரபு,பாலி மொழிகளில் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை என்று தமிழக அரசியல் கட்சினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய தொல்லியில் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு எனப் முறையீடு செய்யப்பட்டது.மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே பழைய அறிவிப்பை ரத்து செய்து செம்மொழி வரிசையில் தமிழை சேர்த்து புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் மனுதாரர் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது .
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…