TN Assembly : டெல்லி சட்ட மசோதா அசுர வேகம்.. மகளிர் மசோதா ஏன் தாமதம்.? சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அவர் கூறுகையில்,  வருகிற அக்டோபர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடும் என்றும், அன்று நிதி மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் 2023-2024 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவீனங்களுக்கு மானிய கோரிக்கைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உள்ளார் என்று குறிப்பிட்டார்.

அடுத்ததாக செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் கூறினார். நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் கூறிய சபாநாயகர் அப்பாவு, சட்ட மசோதா கொண்டு வந்துள்ளனர் அவ்வளவு தான். அதனை நிறைவேற்றுவது கேள்விக்குறி தான் என்று தெரிவித்தார்.

மேலும், இதனை பலமுறை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அது பல்வேறு காரணங்களால் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. பாஜக இதனை கொண்டு வரவேண்டும் என்றால் 2014ஆம் ஆண்டே செய்திருக்க வேண்டும். டெல்லில் அம்மாநில அரசிடம் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றும் அதிகாரம் இருந்தது.

அதனை டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் மேற்கொண்ட போது அதனை எதிர்த்து டெல்லி அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றமும் டெல்லி அரசுக்கு ஆதரவாக , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உரிமை உள்ளது என தீர்ப்பளித்தது.

ஆனால் உச்சநீதிமன்ற தீர்பபையே மீறி, அவசர அவசரமாக ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படும் படி, டெல்லி மாநில சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அசுர வேகத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு.

ஆனால், பெரும்பாலும் அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ள நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு எனும் மசோதாவை நிறைவேற்ற காலதாமதம் ஆகிறது. இத்தனையும் டெல்லி மசோதா போல விரைவில் நிறைவேற்ற வேண்டியது தானே.? அதனை விடுத்து விரைவில் மக்கள் தொகை கணக்கெடுத்து, மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்து அதன் பின்னர் 2026, 2027 இல் நிறைவேற்றும்படி உள்ளனர் என விமர்சித்தார் சபாநாயகர் அப்பாவு.

அடுத்து, புதிய நாடாளுமன்றம் துவங்க உள்ளது என்றால், அதற்கு நாட்டின் முதல் குடிமகனாக உள்ள குடியரசு தலைவர் தான் முதலில் அழைக்கப்பட வேண்டும். ஆனால்,குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை, நாடளுமன்றம் கட்டி முடித்து திறக்கப்படும் போதும் அழைக்கவில்லை, இப்போது அலுவல் பணிகள் துவங்கிய முதல் நாளும் அழைக்கவில்லை. இதிலேயே தெரிந்துவிட்டது அவர்கள்(பாஜக) எண்ணங்கள் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

13 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

13 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

14 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

14 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

15 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

16 hours ago