Annamalai BJP EB [Image-FB/@annamalai]
தமிழக அரசியலில் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என பாஜகவினர் சபதம் என அண்ணாமலை பேட்டி.
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும், அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, இந்தியாவில் காமராஜரைப் போன்று ஒரு முதலமைச்சர் இல்லை. தமிழகத்தில் விவசாய மாநிலமாக மாற்றியதில் காமராஜரின் பெரும் பங்கு உள்ளது. 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் தொழில், அரசியல் உள்ளிட்ட 360 டிகிரி முதலமைச்சர் என்றார்.
இதுபோன்று காமராஜர் வரலாறு குறித்து பேசிய அண்ணாமலை, இந்த நன்நாளில் தமிழக அரசியலில் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என பாஜகவினர் சபதம் எடுத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் கூறுகையில், தமிழகத்தின் உரிமை தொடர்ந்து பறிபோகியுள்ளது. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கர்நாடகாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிருக்க வேண்டும். மத்திய அரசை குறை சொல்வது மட்டுமே தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது என விமர்சித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…