தமிழ்நாடு

இந்த பணியாளர்களின் பணியினை வரன்முறை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு..!

Published by
லீனா

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஜூலை 2022 நிலையில் 5 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக பணிபுரியும் தினக்கூலி தொகுப்பூதிய பணியாளர்களின் பணியினை வரன்முறை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,  இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் 31.07.2021 அன்று தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாகப் பணிபுரியும் தினக்கூலி/ தொகுப்பூதிய பணியாளர்களின் பணியினை வரன்முறை செய்திட ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் தகுதியான தற்காலிக பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டு வருகின்றனர்.

சார்நிலை அலுவலர்களிடமிருந்து வரப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் 31.07.2022 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து பணிவரன்முறை செய்திட தகுதியான பணியாளர்களின் எண்ணிக்கை 328 என இறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே பட்டியலை சரிபார்த்து தற்காலிக பணியாளர் விவரங்களை நீக்கம் செய்ய வேண்டி இருப்பின் அவற்றினை நீக்கம் செய்தும், தகுதியான பணியாளர்களின் விவரங்கள் விடுப்பட்டிருந்தால் அவற்றினை சேர்த்தும் முழுமையான பட்டியலினை முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத அனைத்து திருக்கோயில்களுக்கும் சேர்த்து 15.11.2023 தேதிக்குள் விவரங்களை தொகுத்து ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட மண்டல இணை ஆணையர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

hindu [Imagesource : Twitter/@Nandini Gopalakrishnan]
Published by
லீனா

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

3 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

3 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

3 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

4 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

5 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

5 hours ago