தஞ்சை பெரிய கோயில் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. அதன் காரணத்தால் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தற்போது ஆடி கார்த்திகை வரும் காரணத்தால் பக்தர்கள் கோயில்களுக்கு செல்லக்கூடும் என்பதால் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை கோயில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் மூடப்பட்டுள்ளது. இதில் தஞ்சை பெரிய கோவில், சுவாமிமலை, திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பிரபல கோயிகள் மூடப்பட்டுள்ளது.
அதேபோன்று திருவையாறு, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத்தலங்களான கல்லணை, மனோரா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பு இல்லாமல் தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டதால் சுற்றி பார்க்க வந்த சுற்றுலாப்பயணிகள் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…