டாஸ்மாக் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு டாஸ்மாக் இயங்க அனுமதிகொடுத்ததன் மூலம் தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனையின் பேரில் இயங்க அனுமதி கொடுத்தது.
ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபான கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலமாகவும் மது விற்பனை நடத்தக்கூடாது என்று வழக்குகள் தொடரப்பட்டது.நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது .இதனிடையே மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கம் செய்யப்பட்டது.மேலும் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், மக்களின் உயிரை விட வருவாய் முக்கியமானதா..? அமைதி, சட்டம் ஒழுங்கு சரியில்லாவிட்டால் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டிருக்காது. அரசியல் சாசன விதிகளை அமல்படுத்தும் கடமை நீதிமன்றங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தது.இறுதியாக இன்று தமிழக அரசை பதில் அளிக்க தெரிவித்து வழக்கினை ஒத்திவைத்துள்ளது.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…