உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு – நாளை விசாரணை

Published by
Venu

 உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அண்மையில் உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில், ‘ குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ‘ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது நீதிமன்றம்.

இதனையடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பேரவை உரிமை மீறல் குழு கூட்டம் கூடியது.பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு தெரிவித்தார்.

இந்நிலையில்  நீதிபதி ரவிச்சந்திரபாபு விலகியதை அடுத்து திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. திமுக தரப்பு வழக்கறிஞர் முறையீட்டை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஒப்புதல் தெரிவித்துள்ளார்.மேலும் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

 

Published by
Venu

Recent Posts

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

7 minutes ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

40 minutes ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

1 hour ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

2 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

2 hours ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

3 hours ago