சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை,மகனை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர் என சிபிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ஆண்டும் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு,காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் என 9 பேரை கைது செய்தனர். மேலும்,இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை,மகனை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர் என சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும்,காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள சக்தி மக்களை காப்பாற்றுவதற்காக மட்டுமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ தரப்பு வாதிட்டுள்ளது.
குறிப்பாக,சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ்-க்கு பிணை வழங்க சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டது.இதனைத் தொடர்ந்து,வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…