நீதிமன்றம் தலையிட முடியாது! இபிஎஸ் தரப்பின் பரபரப்பான வாதம்.. அதிமுக வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

கட்சியின் செயல்பாட்டை முடக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என இபிஎஸ் தரப்பு வாதம்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. ஒரு மாத இடைவெளிக்கு பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் மீண்டும் விசாரணை நடைபெற்றுது.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழங்கறிஞர் சிஎஸ் வைத்தியநாதன் வாதத்தை முன்வைத்தார். இபிஎஸ் தரப்பு வாதத்தில் கூறியதாவது, கட்சி விதிப்படி, கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது. ஒழுங்கு நடவடிக்கை உள்பட அனைத்து நடவடிக்கைளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எப்படி நிவாரணம் கோர முடியும்?, மாநிலம் முழுவதும் தனியாக நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்து வருகிறார். திருத்துவதற்கும், தளர்த்துவதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. கட்சியின் உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் தான்.

கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. கட்சியின் அடிப்படை விதிகளை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. எந்த விதி மீறப்பட்டது என குறிப்பிட்டு குற்றச்சாட்டப்படவில்லை. ஒற்றைத் தலைமை கட்சி விதிகளுக்கு எதிராக இல்லை. கட்சி செயல்பாடு தொடர்ந்து முடங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மேல்முறையீட்டு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழு செல்லும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த பிழையும் இல்லை. உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது தவறு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என வாதம் வைத்தனர். இந்த நிலையில் இபிஎஸ் தரப்பு வாதங்களை தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். அதன்படி, ஓபிஎஸ் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மீண்டும் ஐகோர்ட்டில் நடைபெறும். அப்போது, ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்படும் என கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

14 minutes ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

39 minutes ago

மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

52 minutes ago

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

13 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

13 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

15 hours ago