தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தெருவை சார்ந்த பாபு.இவர் வெளிநாட்டு நிறுவனத்தில் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.இவர் மனைவி பொன்செல்வி நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பொன்செல்வி தனது வீட்டில் டேசன் இனத்தை சார்ந்த இரண்டு நாய்கள் வளர்த்து வந்தனர்.அதில் ஒரு அப்பு என்ற ஆண் நாய்யும் , நிம்மி என்ற பெண் நாய்யும் உள்ளது.
நேற்று முன்தினம் பொன்செல்வி தனது வீட்டில் மகள்களுடன் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு நுழைந்து உள்ளது.அந்த பாம்பை பார்த்த ஆண் நாய் பாம்பின் மீது பாய்ந்து கடித்து குதறியது.இதில் அந்த பாம்பும் நாயை கொத்தியது.
அடுத்த மறுநாள் காலையில் கண் விழித்து பார்த்த பொன்செல்வி வீட்டின் கதவின் பக்கத்தில் பெண் நாய் மட்டும் இருந்தது.பிறகு ஆண் நாயை தேடி பார்த்த போது ஆண் நாய் இறந்து கிடந்தது.அதன் அருகில் ஒரு நல்ல பாம்பும் இறந்தது கிடைத்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார் பொன்செல்வி.
தனது எஜமானியின் குடும்பத்தை காப்பாற்ற தான் உயிரையே கொடுத்த அந்த நாயை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…