நீட் தேர்வில், கோவையில் முதல் தலைமுறையாக மலசர் பழங்குடி மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்தியா முழுவதும் செப்.12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.
இந்த நீட் தேர்வில், கோவையில் முதல் தலைமுறையாக மலசர் பழங்குடி மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவியின் பெயர் சங்கவி (வயது 20). மதுக்கரை அருகே உள்ள எம்.நஞ்சப்பனூர் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை முனியப்பன் இறந்து விட்டார். தாயார் வசந்தாமணி கண் பார்வை குறைபாடுள்ளவர்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி சங்கவி, தன்னுடைய சாதி சான்றிதழ் வாங்க கடுமையாக போராடி வெற்றி பெற்ற நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறவும் கடுமையாக பேராடி வெற்றி கண்டுள்ளார். இதுகுறித்து மாணவி கூறுகையில், ‘என்னுடைய வெற்றி என் கிராமத்தின் வெற்றியென மாணவி பெருமிதம்’ என தெரிவித்துள்ளார்.
மாணவி சங்கவி, நீட் தேர்வில் இவர் 720 மதிப்பெண்களுக்கு 202 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பழங்குடியின மாணவியான இவர் 108 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…