மாஜிஸ்திரேட்டை மரியாதை குறைவாக பேசியவர்களை விளக்கமளிக்க உயர்நீதிமன்ற கிளை கெடு விதித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வருகின்றனர்.
நேற்று கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை நடத்தினார். நடைபெற்ற விசாரணையின் போது மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது.மேலும் இன்று ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர்.அப்பொழுது நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.அப்பொழுது, மன அழுத்தம் காரணமாக மாஜிஸ்திரேட்டை போலீசார் அவமதிக்கும் விதத்தில் பேசிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் ஆகிய மூவரும் 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…