சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட, அரக்கோணம் ரயில்வே மின்சார லோகோ பணிமனையில், மின்சாரம் மற்றும் பேட்டரியில் இயங்கும், ரயில் இன்ஜின் தயாரிக்கப்பட்டுவருகிறது.மேலும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இயங்கும் இன்ஜினுக்கு, ‘பசுமை’ என, பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் இன்ஜின், பேட்டரி மூலம் மூன்றரை மணியில் இருந்து, நான்கு மணி நேரம் வரை இயங்கும் எனவும், 24 பெட்டிகள் வரை இந்த இன்ஜீனுடன் இணைத்து இயக்க முடியும். இந்த இன்ஜின் 1,080 டன் வரை இழுத்து செல்லும் திறன் கொண்டது. மேலும் இது மணிக்கு, 15 கி.மீ., வேகத்தில் இயங்கும். மின்சார ரயில் பாதைகளில் விபத்து காலங்களில், இந்த இன்ஜின் பயன்படுத்தி, ரயில்கள் இயக்க உதவியாக இருக்கும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று, பேசின் பிரிட்ஜ் — சென்டரல் நிலையம் இடையே, 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு, வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த இன்ஜினை தயாரித்த, அரக்கோணம் மின்சார லோகோ பணிமனை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் பாராட்டி, அவர்களுக்கு பரிசும் அறிவித்து உள்ளார்.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…