Chennai High Court - H Raja [File Image]
பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்குகளை நீக்க கோரி அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 2018 முதல், அவரது டிவிட்டர் (தற்போது எக்ஸ் சமூக வலைத்தளம்) பக்கத்தில் பெரியார் சிலையை உடைப்பது என கருத்து வெளியிட்டது. திமுக எம்பி கனிமொழி பற்றி விமர்சித்தது, பெண் அரசு ஊழியர்கள் பற்றி விமர்சித்தது என எச்.ராஜா மீது 11 வழக்குகள் காவல்நிலையத்தில் பதியப்பட்டன.
இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டு பதியப்பட்டது எனவே அவற்றை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதே போல, இந்த வழக்குகளை நீக்க கூடாது. எச்.ராஜா தொடர்ந்து பெண்கள் பற்றி அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார் என காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இதனை ஏற்று, எச்.ராஜா மீதான வழக்குகளை நீக்க முடியாது என உத்தரவிட்டு, எச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளன.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…