EPS Critisize [Image source : Screenshot/PuthiyathalaimuraiTV]
மாயமானும், மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளன என்று ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்தது குறித்து இபிஎஸ் விமர்ச்சித்துள்ளார்.
அதிமுகவில் சமீப காலமாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு மேற்கொண்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
அந்த வகையில் தற்பொழுது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், மாய மானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது, பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், என்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதோடுமட்டுமல்லாமல், துரோகி என்று டிடிவி தினகரன் ஓபிஎஸ்-ஐ குறிப்பிட்டார், அதற்கு ஓபிஎஸ்-ம் டிடிவி தினகரனை துரோகி என்று குறிப்பிட்டார். ஆனால் இப்பொழுது இரண்டு துரோகிகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியை உருவாக்குவதாக கூறியிருக்கின்றனர். மேலும், டிடிவி தினகரன் கூடாரம் ஏற்கனவே காலியாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த நிலையாக உள்ளது. என்று கூறினார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…