தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
அமெரிக்கா பரிந்துரையில் தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரு நாடுகளுக்கும் நன்றி என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதற்றமான சூழலில் நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார். இதையடுத்து, இந்தியா மாற்றம் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அதனை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருந்தது.
இதையடுத்து, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, துப்பாக்கிச் சண்டையும், ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்த்தும் இருந்தார். இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தனது Truthsocial சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது ” இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் தலைவர்களோட புத்திசாலித்தனமும், தைரியமும், வலிமையும் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எதற்காக என்றால் இவர்கள் இரண்டுதலைவர்களும் ஒரு பெரிய சண்டையை (போர்) நிறுத்த முடிவு பண்ணிட்டாங்க. இது தொடர்ந்திருந்தா, லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பார்கள்.
எல்லாமே அழிஞ்சிருக்கும். ஆனா இவங்க அதை தடுத்துட்டாங்க. இதனால இவங்க தலைவர்களோட பெயர் இன்னும் பெரிதாக பேசப்படும். இந்த சண்டையை நிறுத்தறதுக்கு அமெரிக்கா உதவி பண்ணது. இதுக்கு நான் ரொம்ப சந்தோஷப்படறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியா இருக்கறதுக்கு நாங்க ஒரு சின்ன பங்கு வகிச்சோம்.இதைப் பத்தி இன்னும் யாரும் பேசல, ஆனா நான் ஒரு பெரிய முடிவு எடுத்திருக்கேன். இந்தியாவோடயும், பாகிஸ்தானோடயும் வர்த்தகத்தை (பிசினஸ்) நான் ரொம்பவே அதிகப்படுத்தப் போறேன்.
காஷ்மீர் பிரச்சினை ரொம்ப நாளா (ஆயிரம் வருஷமா) இருக்கு. இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க, நான் இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களோட சேர்ந்து வேலை பண்ணுவேன். இது எளிது இல்ல, ஆனா முயற்சி பண்ணுவோம். இந்தியாவோட தலைவர்களுக்கும், பாகிஸ்தானோட தலைவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனவும் கூறியுள்ளார். ’காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமான பகுதி, மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை’ என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மாறாக, ‘மத்தியஸ்தம் செய்யத் தயார்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த கருத்து தெரிவித்துள்ளது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.