போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?
மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது எப்போது என்பது குறித்து பிசிசிஐ விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போர் நிறுத்தப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்கிற கேள்விகளும் எழும்ப தொடங்கிவிட்டது.
கடந்த வாரம் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு இன்று, ஐபிஎல் 2025 போட்டிகளை தொடர்ந்து நடத்தலாமா வேண்டாமா என பிசிசிஐ மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.இதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் மீதம் உள்ள போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்குவது குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்குவதற்காக சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீண்டும் அழைக்கும் பணியில் அந்ததந்த அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டவுடன் மீண்டும் தொடர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடருக்கு பிறகு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் அந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 முதல் 25 வரை நடைபெறவிருக்கிறது. எனவே, அதன் பிறகு தான் தான் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால், தற்போது போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள காரணத்தாலும் சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீண்டும் அழைக்கும் பணியில் அந்ததந்த அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ள காரணத்தாலும் விரைவாகவே ஐபிஎல் போட்டிகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் எந்த தேதியில் மீண்டும் ஐபிஎல் போட்டி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.