எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர் 2″ போன்ற இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இரு நாடுகளிடையேயான எல்லை மோதல்கள் அதிகரித்துள்ளன.
தொடர்ந்து நான்கு நாட்களாக பரபரப்பாக சென்று கொண்டிருந்த தாக்குதல்களை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ள இருந்தது. இந்தப் பதற்றமான சூழலில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு சீனா உறுதியாக நிற்கும். பாகிஸ்தானுக்கு அதன் இறையாண்மையைப் பாதுகாக்க முழு உரிமை உள்ளது. இந்த விஷயத்தில் சீனா பாகிஸ்தானுடன் தோளோடு தோள் நின்று ஆதரவளிக்கும்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை சீனா ஆதரிக்கிறது, மேலும் இந்தப் பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். சீனா-பாகிஸ்தான் உறவு வரலாற்று ரீதியாக வலுவானது, இந்த நட்பை மேலும் ஆழப்படுத்துவோம்.” எனவும் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.