நாளை மறுநாள் முக்கிய திட்டம்… காஞ்சிபுரத்தில் ட்ரான் பறக்க தடை விதிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்.15 அன்று நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டம் தொடர்பாக இறுதிக்கட்ட பணிகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழாவானது வரும் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்கள். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.06 கோடி பேருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். இதனை வெற்றிகரமாக நடத்தி காட்டும் பொறுப்பும், கடமையும் அதிகாரிகளுக்கு இருக்கிறது. தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரும் செப்.15 முதல் கிடைக்கும். மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்படும்.

இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எனவும் தெரிவித்திருந்தார்.தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் வங்கி கணக்குகளில் ஒரு ரூபாய் வரவு வைத்து சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. இந்த நிலையில்,  முதலமைச்சர் முக ஸ்டாலின் வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் ட்ரான் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் நாளை மறுநாள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க  உள்ள நிலையில், ட்ரான் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

9 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

10 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

10 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

11 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

11 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

12 hours ago