பிரதமருக்கு அச்சம் வந்துவிட்டது… ஆம் திமுக குடும்பம் தான்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

Published by
Muthu Kumar

பிரதமர் குறிப்பிட்டது போல் திமுக ஒரு குடும்பம் தான், என முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

அண்ணா அறிவாலயத்தில் இல்லத்திருமான  நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு உரையாற்றினார், அப்போது அவர் பேசும்போது பிரதமர் மோடி, நமது திமுகவை குடும்ப அரசியல் நடத்துவதாகவும், அதை வைத்து பிழைப்பு நடத்துவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதற்கு நான் பதில் அளிக்க வேண்டுமானால், திமுக வை தொடங்கிவைத்த அறிஞர் அண்ணா தொண்டர்கள், கழக உறுப்பினர்கள் அனைவரையும் தம்பி என்று தான் உரிமையுடன் அழைத்தார். இதையடுத்து கலைஞர் அவர்களும், கழக தொண்டர்கள், உறுப்பினர்கள் மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் உடன்பிறப்பே என்று தான் அழைத்தார்.

ஆம் பிரதமர் கூறியது போல் திமுக என்பது ஒரு குடும்பம் தான். நமது திமுக மாநாட்டிற்கு என்றாலும், போராட்டத்திற்கு என்றாலும் வருபவர்கள் அனைவர்ளும் குடும்பம் குடும்பமாக தான் வருவார்கள். மேலும் பிரதமர் மோடி திமுகவுக்கு வாக்களித்தால் வளர்ச்சி அடைவது நமது கலைஞர் கருணாநிதியின் குடும்பம் என குறிப்பிட்டது போல், நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தால் வளர்ச்சி அடைவது நமது கலைஞர் கருணாநிதியின் குடும்பமான தமிழக மக்கள் தான்.

கடந்த 23 ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்ற பிறகு, தேர்தல் குறித்து பிரதமருக்கு பயம் வந்துவிட்டது. அதன்பிறகு பிரதமர் கொண்டுவந்த சட்டம் தான் பொது சிவில் சட்டம், இதன்மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பிரதமர் நினைக்கிறார். அடுத்த 2024 தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு சரியான பாடம் கற்பித்து, நாட்டில் சரியான ஆட்சி அமைவதற்கு நீங்கள் தயாராக வேண்டும் என கூறினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

15 minutes ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

36 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

1 hour ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago