“அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை;திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது” – மநீம தலைவர் கமல்ஹாசன்..!

Published by
Edison

அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை;திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினம் ஜனவரி 26, உழைப்பாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, காந்தி பிறந்தநாள் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் மக்கள் தங்கள் பகுதி கோரிக்கையை வைப்பார்கள்.கொரோனா பரவல் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

இதனையடுத்து,இன்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் பிரவீன் நாயர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,கிராம சபை நடக்காது என்பதன் மூலம்,அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை;திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதவாது:

“கொரானாவில் தேர்தல் நடக்கும்,வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப்  புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

13 minutes ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

55 minutes ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

1 hour ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

2 hours ago

விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் இன்னொரு த.வெ.க மாநில மாநாடு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…

3 hours ago