அரசு அலுவலகங்களில் இதை காட்சிப்படுத்த வேண்டும் – தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு..!

Iraiyanbu IAS

அரசு அலுவலகங்களில் திருக்குறள் மற்றும் தமிழ் கலைச் சொற்களை காட்சிபடுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் அலுவலகங்களை தவிர மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத் துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஊாரியங்கள், கழகங்கள் இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லையும் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும். மேலும் ஒரு திருக்குறளை பொருளுடன் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும்.

எனவே மேற்படி அரசாணையில் அறிவுறுத்தியதிற்கிணங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும் திருக்குறளின் முப்பாக்களில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய அதிகாரங்களில் அதன் பொருளுடனும் தமிழ் ஆட்சிச் சொல் அகராதியில் உள்ள சொற்களில் ஓர் ஆங்கில சொல்லை அதற்குரிய தமிழ்ச் சொல்நுடனும் 4×3 என்ற அளவில் அனைத்து அலுவலக கரும்பலகை வெள்ளை பலகையிலும் நாள்தோறும் எழுதி வைக்குமாறு அனைத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள் முதன்மை செயலாளர்கள்/ செயலாளர்கள், துறைத் தலைமை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு கழகங்கள், வாரியங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் ஆகியோர்களை கேட்டுக் கொள்ளலாம். மேலும் மேற்படி பணிகள் நடைபெற்று வருவதை கண்காணித்து உரிய அறிக்கைகளை அரசுக்கு அனுப்புமாறு தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் வளர்ச்சி மண்டல துணை இயக்குநர் / மாவட்ட நிலை அலுவலர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

iraiyanbu
iraiyanbu [Imagesource : Twitter]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்